Thursday, 28 June 2018

முதல்வர் எப்படி இருக்கவேண்டும்

#அன்று லண்டனில் ஒரு தேர்வை நடத்திவிட்டு இந்தியா திரும்ப
ஏர் இந்தியாவில் பயணம்

எனக்கு  முதல் வகுப்பு டிக்கெட்

நான் மட்டுமே அமர்ந்திருந்தேன்

  சற்று நேரத்தில்  ஒரு மனிதர் வந்தார்

#எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே

ஆம் குஜராத் முதல்வர் நரேந்திர  மோடி

எங்கள்  இருவரையும் தவிர வேறு யாரும் முதல் வகுப்பில் இல்லை

அழைப்பு மணியை அழுத்தினால் பணிப்பெண் தண்ணீரை கொண்டு வருவார்

#ஆனால் அவரோ தானே எழுந்து வழங்குமிடம் சென்று தண்ணீர் குடித்து விட்டு  அமர்ந்தார்

பார்ப்பதற்கு  நல்ல மனிதராக இருக்கிறாரே என நினைத்தேன்

#சற்று நேரத்தில் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்  கொண்டார்

நான் அவரிடம் அரசியல்வாதிகளிடம் அவ்வளவாக பேசுவதில்லை  என்றேன்

என்னை பற்றி கேட்டுவிட்டு ஒரு வேண்டுகோள் வைத்தார்

#டாக்டர்  குழந்தை நலம் பற்றி தெரியவேண்டும்  சொல்லுங்களேன்

பிறந்த குழந்தைகளை போஷிப்பதை விட கருவுற்ற தாய்மார்களின் உணவில் கவனம் செலுத்தினால் பின்னர் குழந்தைகள் ஆரோக்கியத்தை பற்றி கவலையில்லை என  நான்சொல்ல

ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு குறித்து கொள்ள ஆரம்பித்தார்

லண்டனில் இருந்து மும்பைக்கு  9 மணி நேரம்

#முழுவதும் நான் சொல்வதை எழுதிக்கொண்டார்

மும்பை வந்தது  நான் பெங்களுக்கும் அவர் குஜராத்திற்கும் என விடைபெற்றோம்

சில நாட்களுக்கு  பிறகு  அவருடைய சுகாதார அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் என்னை அழைத்தார்

#நீங்கள்  ஒரு பத்திரிகையில்  தாய்மார்கள் ஏழைகளாக  இருந்தால்  அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நலமில்லாதவர்களாகவே இருப்பார்கள் என்று எழுதியதை முதல்வர் படித்துவிட்டு
உங்களை  காந்திநகரில் ஒரு கருத்தரங்குக்கு அழைக்கிறார் என அழைப்பு விடுத்தார்

இந்த நேரத்தில் வேறு ஒரு நிகழ்வை நினைவு கூற விரும்புகிறேன்

மணிப்பால் துணை வேந்தராக இருக்கும் போது கர்நாடக முதல்வர் என்னை பார்க்க விரும்புவதாக தகவல்

காலை 9  மணிக்கு சந்திக்க நேரம்

நானும் போய் அமர்ந்திருந்தேன்

மாலை 5 மணிவரை  அழைக்கவில்லை

#சரி புறப்படுகிறேன் என சொன்னவுடன் உள்ளே அழைத்தார்  முதல்வர்

யார் நீங்க என்ன வேண்டும்  என கேட்டார் அந்த மாண்புமிகு முதல்வர்

எனக்கு ஒன்றும் வேண்டாம்  நீங்கள் அழைத்ததால் வந்தேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்

#இப்போது நாம் மீண்டும் குஜராத்தில் என்ன நடந்தது  என சொல்கிறேன் 

குஜராத்  போனேன் சரியாக காலை  மணி  9.45

வாயிலில் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் வரிசையாக நின்று வரவேற்றனர்

பத்துமணிக்கு  கருத்தரங்கம்  ஆரம்பித்தது

என் அறிமுகம் ஆனவுடன்  கருவுற்ற  தாய்மார்களின் நலன் பற்றி பேச ஆரம்பித்தேன்

#பேசி முடித்தவுடன் பங்கு பெற்றவர்களை கேள்வி கேட்க சொன்னார் மோடி

தானும் பல சந்தேகங்களை கேட்டார்

பிறகு இதோ எனது உத்தரவுகள் நாளை காலையில் இருந்து  ஏழை தாய்மார்களுக்கு சத்துணவு திட்டம் அமுலுக்கு  வருகிறது என்றார்

#அதன் விளைவு தான் இன்றளவும் நாட்டிலேயே குழந்தைகள்  இறப்பு ( infant mortality rate  ) விகிதம் மிக குறைந்த மாநிலமாக குஜராத் திகழ்கிறது

ஒரு மாதிரி முதல்வர்  மோடி தான் A Model CM

இதை சொல்வதால் நான் மோடிக்கு ஒட்டு போடுங்கள் என கேட்கவில்லை

அது உங்கள் விருப்பம்

அவர் மாதிரி நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்
......................
#டாக்டர் ஹெக்டே எனும்  பெரிய கல்வி மேதை பேசிய பேச்சினை முடிந்தவரை தமிழாக்கப்படுத்தியுள்ளேன்!
https://youtu.be/7rQNOD4mqu8

No comments:

Post a Comment