Friday, 15 June 2018

ஏழைகளின் பிரதமர் மோடிஜி

மல்லையா பணமோசடி செய்து  வெளிநாடு தப்பி ஓடிவிட்டார்,  என்ற முதல் வரி மட்டுமே தமிழ்நாட்டில் பிரபலமாக ஒலித்தது, இன்றும் ஒலிக்கும் வார்த்தை.

அதை தொடர்ந்து மல்லையா பற்றிய
 வழக்குகளோ மல்லையாவின் நிலைமையோ,
அல்லது சமீபத்தில் மல்லையாவின் லண்டன் கைது & அவருடைய அப்பீல் நிராகரிப்பு  என முழுவதையும் அறிந்தால் நிச்சயம்  நீங்கள் மோடியை பாராட்டாமல் இருக்க முடியாது என அடித்து சொல்வேன்.

 இப்போது அவர்கள் நிலை

 கடனை கட்டிவிடுகிறோம் தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள் தினமும் ஏராளமான வருமானத்தை இழந்து வருகிறோம்.  என நிரவ்வின்  நிறுவனம் கெஞ்சுகிறது.

மோடி தரப்பு :  ம்ஹூம்...ஓடிப்போன உங்க மொதலாளியை வரச்சொல்லுங்க  மிச்சத்தை அப்றமா பேசிக்கலாம் என்கிறது.

மல்லையாவோ லண்டன் நீதிமன்றத்தில் கெஞ்சுகிறார்.

கட்டவேண்டியதில் இன்னும் ஓரளவுதான் பாக்கி இருக்கு,
 இதுக்காக உலகம் முழுக்க உள்ள என் சொத்துக்களை முடக்கிவைத்திருக்கிறது பாரத அரசு

அதை விலக்கிட வேண்டி செய்த மேல்முறையீட்டையும் நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்.

நேற்றைய தீர்ப்பில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட  வாழ்வாதார செலவு தொகை  வாரத்துக்கு 18.5 லட்சம்.           
அதனை 4.5 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் லண்டன் அவரை கைவிடுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

பார்ட்டியை சீக்கிரேமே டெல்லி போலீஸ் கைது செய்யலாம்.
 ஏற்கனவே பாரத அரசின் கோரிக்கையை ஏற்று லண்டன் போலீஸ் மல்லையாவையும், ஹாங்காங் போலீஸ் நிரவ்வையும் கைது செய்ததையும், மோடி அரசின் அழுத்தம் காரணமாக தான்.

 நோக்கியா நிறுவனம் சொத்துக்களை விற்று 1600 கோடிகளை கட்டிவிட்டது, என்பதையும் நினைவு படுத்துகிறேன்.

கூடுதலாக இன்னொரு செய்தி,

இந்திய வரலாற்றில் மோடி மட்டுமே அம்பானிக்கு சம்மன் அனுப்பி அபராதம் விதித்து வசூலித்திருக்கிறார்.

அப்பறம் மோடிதான் அவர்களுக்கு கடன் கொடுத்தார்ன்னு ஊளையிட்டு கொண்டிருப்பவர்களுக்கு

 சொல்வதெல்லாம் இருக்கட்டும் ,,  அவர்களோடு, பலரும்  6.5 லட்சம் கோடி அளவில் கடன் பெற்றதெல்லாம்
மன்மோகன், சிதம்பரம், ரகுராம்ராஜன் கூட்டணியிடம், அதாவது காங்கிரஸ் ஆட்சியில்.

மோடி கறாராக வசூல் மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்.

ஏன் பாஜக 23வது மாநிலமாக  தொடர்ந்து ஜெயிச்சிட்டு இருக்குனு  இன்னமும் உங்களுக்கு தெரியாதுல்ல.....

மேலே குறிப்பிட்டுள்ள விசயங்களை வடநாட்டு மக்கள் அறிந்து கொண்டதனால்...

நீங்க இன்னும் திராவிட அரசியல் வியாபாரிகளின்  ஊளைகளையே நம்பி கொண்டிருங்க ... வெளங்கிடும் தமிழ்நாடு !

No comments:

Post a Comment